Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காணாமல் போனோரை தேடி ஐந்து மாவட்டங்களில் தொடர்கிறது போராட்டம்

In இலங்கை
Updated: 04:49 GMT, Mar 28, 2017 | Published: 04:47 GMT, Mar 28, 2017 |
0 Comments
1142
icon_com
This post was written by : Varshini
protest

இறுதிக்கட்ட யுத்தத்தில் காணாமல் போன மற்றும் ராணுவத்திடம் கையளிக்கப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் உண்மை நிலையை வெளிப்படுத்துமாறு கோரி வடக்கு கிழக்கின் ஐந்து மாவட்டங்களில் தொடர்ந்தும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இன்று கிளிநொச்சியில் 37ஆவது நாளாகவும், வவுனியாவில் 33ஆவது நாளாகவும், முல்லைத்தீவுவில் 21ஆவது நாளாகவும், யாழ்ப்பாணத்தில் – வடமராட்சி கிழக்கில் 14ஆவது நாளாகவும், கிழக்கில் திருகோணமலையில் 24ஆவது நாளாகவும் இப் போராட்டங்கள் தொடர்கின்றன.

அரசாங்கத்தை நம்பியே தமது உறவினர்களை ராணுவத்திடம் ஒப்படைத்தோம் எனத் தெரிவிக்கும் இம் மக்கள், இதற்கு மைத்திரி – ரணில் அரசாங்கம் கூறப்போகும் பதிலென்ன எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

விசாரணைகளை நம்பி எவ்வித பிரயோசனமும் இல்லையென தெரிவிக்கும் இம் மக்கள், தமது உறவுகள் குறித்த உண்மை நிலையை அரசாங்கம் வெளிப்படுத்தும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லையென தெரிவித்துள்ளார்.

மக்களின் இப் போராட்டங்களுக்கு நாளுக்கு நாள் பொது அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் தலைவர்கள், இளைஞர் அணியினர் என பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg