Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சன் டியாகோ – டியுவானா நகரங்களின் மேயர்களுக்கிடையில் சந்திப்பு

In உலகம்
Updated: 05:53 GMT, Mar 28, 2017 | Published: 05:20 GMT, Mar 28, 2017 |
0 Comments
1217
icon_com
This post was written by : Sylviya
02

எல்லைப் பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் தொடர்பில் கலந்துரையாடும் பொருட்டு, அமெரிக்க – மெக்ஸிக்கோ எல்லையில் அமைந்துள்ள சன் டியாகோ (San Diego) மற்றும் டியுவானா (Tijuana) ஆகிய நகரங்களின் மேயர்கள் மெக்ஸிக்கோவில் சந்தித்துள்ளனர்.

குறித்த சந்திப்பு நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றுள்ளது. வட. அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (NAFTA) தொடர்பில் நிச்சயமற்ற தன்மை நிலவும் நிலையிலேயே குறித்த சந்திப்பை இரு நகர மேயர்களும் மேற்கொண்டனர்.

வட. அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் எனவும் அமெரிக்கா மற்றும் மெக்ஸிக்கோவுக்கு இடையில் எழுப்பப்படவுள்ள சுவருக்கு 24 பில்லியன் அமெரிக்க டொலர்களை மெக்ஸிக்கோ செலுத்த வேண்டும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் நிர்வாகம் தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நெருக்கடியான சூழ்நிலைக்கு மத்தியிலேயே இந்த சந்திப்பு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

இவ் ஒப்பந்தத்தின் மிக முக்கிய அம்சங்களை பாதுகாக்கும் பொருட்டு இனிவரும் காலங்களில் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகளில் சான் டியாகோ மற்றும் டியுவானா நகர பிரதிநிதிகள் அக்கறை செலுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, அமெரிக்கா மற்றும் மெக்ஸிக்கோவுக்கு இடையில் பரிமாற்றப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளில் 20 சதவீதமானவை சன் டியாகோவிற்கே அனுப்பிவைக்கப்படுவதாக உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட சில அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg