Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காங்கேசன்துறையில் இராணுவப் பயிற்சி! – பதற்றத்தில் மக்கள்

In இலங்கை
Updated: 06:39 GMT, Mar 28, 2017 | Published: 05:04 GMT, Mar 28, 2017 |
0 Comments
1760
icon_com
This post was written by : Varshini
army practice in kks

மாலியில் ஐ.நா. அமைதிப் படையில் பணியாற்றச் செல்லவுள்ள இராணுவத்தின் அணியொன்று காங்கேசன்துறையில் பாரிய களப்பயிற்சி ஒத்திகையை திடீரென ஆரம்பித்ததால் மக்கள் பதற்றமடைந்துள்ளனர்.

நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பமான இப் பயிற்சி நடவடிக்கை எதிர்வரும் 4ஆம் திகதி அம்பாந்தோட்டையில் நிறைவடையவுள்ளது.

காங்கேசன்துறையிலிருந்து கடற்கரையோர வீதியின் ஊடாக பருத்தித்துறை நகருக்குள் திடீரென இராணுவத்தின் தொடர் வாகன அணி பிரவேசித்தமையினால் மக்கள் திகிலடைந்தனர். வெள்ளை நிறப் பூச்சுகளுடன் ஐ.நா. அடையாளம் பொறிக்கப்பட்ட 68 வாகனங்களும் ஒன்றன் பின் ஒன்றாக கடற்கரையோர வீதியின் ஊடாகச் சென்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனாலேயே மக்கள் பதற்றமடைந்துள்ளனர்.

மாலியில் ஐ.நா.வின் சண்டை வாகனத் தொடரணியில் இடம்பெறவுள்ள இராணுவத்தின் 15 அதிகாரிகள் மற்றும் 185 படையினர் இந்தப் பெரிய ஒத்திகைப் பயிற்சியில் பங்கேற்றுள்ளனர்.

மாலியில் உள்ள களநிலைச் சவால்களை எதிர்கொள்வது குறித்த தயார்படுத்தல்களை மேற்கொள்ளவே இந்த ஒத்திகை முன்னெடுக்கப்படுகின்றது. இந்தப் பயிற்சியில் கவசப்படை, இயந்திர காலாட்படை மற்றும் ஏனைய உதவிப்படைப் பிரிவுகளுடன் 68 வாகனங்களும் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg