Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டெங்கு ஒழிப்பு வாரம் இன்றுமுதல் ஆரம்பம்: சுகாதார அமைச்சு

In இலங்கை
Updated: 05:01 GMT, Mar 29, 2017 | Published: 04:44 GMT, Mar 29, 2017 |
0 Comments
1214
This post was written by : Ravivarman

நாடு முழுவதும் டெங்குநோயின் தாக்கம் அதிகரித்துள்ளதை தொடர்ந்து இன்று முதல் டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்னவின் பணிப்புரைக்கு அமைவாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மற்றும் சுகாதார அமைச்சு ஆகியன இணைந்து டெங்கு ஒழிப்பு வாரத்தினை நடைமுறைப்படுத்துகின்றது.

டெங்கு நோயை பரப்பும் நுளம்புகள் உருவாகும் சூழலை இனங்கண்டு அவற்றை சுத்தம்செய்து நுளம்புகள் உருவாகாமல் தடுப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.

அண்மைக்காலமாக தீவிரமடைந்து வரும் டெங்கு நோயினால் நாடு முழுவதும் 24 ஆயிரத்து 562 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 40 பேர் மரணமடைந்துள்ளார்கள்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கேகாலை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, இரத்தினபுரி மாவட்டங்களில் டெங்கு நோயின் பாதிப்பு அதிகமாக உள்ளதென சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg