Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பஷீர் சேகுதாவூத்திடம் பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினர் தீவிர விசாரணை

In இலங்கை
Updated: 08:41 GMT, Mar 29, 2017 | Published: 05:57 GMT, Mar 29, 2017 |
0 Comments
1129
icon_com
This post was written by : Ravivarman
1 (3)

தாருஸ்ஸலாமைப் பற்றிய சர்ச்சைக்குரிய புத்தகம் தொடர்பாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகுதாவூத்திடம் குற்றத் தடுப்புப் பிரிவினர் தீவிர  விசாரணை நடத்தியுள்ளனர்.

கொழும்பு தலைமையக பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினரால் நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) மூன்று மணித்தியாலங்களுக்கும் மேலாக பஷீரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சித் தலைமையகமான தாருஸ்ஸலாமைப் பற்றி தாருஸ்ஸலாம் மீட்பு முன்னணியினரால்  ‘தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள்’ எனும் பெயரில்  ஒரு புத்தகம் வெளியிடப்பட்டிருந்தது.

தாருஸ்ஸலாமின் ஆவணங்கள் அடங்கிய அந்தப் புத்தகம் நாடு முழுவதும் உள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், அரசியல் ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட இன்னும் பலருக்கு அண்மையில் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சர்ச்சைக்குரிய இப் புத்தகம் குறித்து கிழக்கு முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.சல்மான் ஆகியோர் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடொன்றை செய்திருந்தனர்.

இது தொடர்பாக ஏற்கனவே இரண்டு தடவைகள் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் பஷீர் சேகுதாவூத் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த போதிலும் அவர் விசாரணைக்காகச் சமூகமளித்திருக்கவில்லை. இதனையடுத்து குற்றத் தடுப்புப் பிரிவினரால் விடுக்கப்பட்ட உத்தரவின் பிரகாரம் நேற்றைய தினம் அவர் பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவில் ஆஜராகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

3 2 (2) DSC02743

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg