Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் பெண்கள் முன்னுதாரணமானவர்கள்: நீதவான் கணேசராஜா

In இலங்கை
Updated: 06:52 GMT, Mar 29, 2017 | Published: 06:42 GMT, Mar 29, 2017 |
0 Comments
1086
icon_com
This post was written by : Ravivarman
IMG_0122

முஸ்லிம் சமூகத்தில் துணிச்சல் மிக்க பெண்கள் உருவாகியுள்ளதையிட்டு பெருமைப்பட முடிவதாக நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான மாணிக்கவாசகர் கணேசராஜா தெரிவித்தார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்பு வில்லியம் ஓல்ட் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே மேற்படி அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தேவை நாடும் மகளிர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ‘மாற்றத்திற்காய் துணிந்திரு’ எனும் தொனிப் பொருளிலான மகளிர் விழிப்பூட்டும் நிகழ்வு அமைப்பின் சட்ட ஆலோசகர் கே.யோகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.  இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மனித உரிமை விடயங்கள் தொடக்கம் அனைத்து விடயங்களிலும் முஸ்லிம் பெண் சமூகம் துணிச்சலுடன் முன்னோக்கிச் சென்று குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற பல கொடுமைகளைக் கண்டித்து குரல் கொடுத்தவர்கள் முஸ்லிம் பெண்களாவர்.

ஒவ்வொரு பெண்ணும் சட்டத்தை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். எந்தக் கலாசாரமாக இருந்தாலும் வன்முறையென்று வரும்போது சட்டத்தினை நாட வேண்டும்.

இவ்வாறான வழங்குகளில் பல சட்டத்தரணிகள் தங்கள் வாதங்களை சரியான முறையில் முன்வைப்பதில்லை. எனவே சரியான வாதங்களை முன்வைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்க சட்டத்தரணிகள் முன்வர வேண்டும்”  என நீதவான் கணேசராஜா மேலும் தெரிவித்தார்.

IMG_0077 IMG_0120 IMG_0168

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg