Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியா ரெட் அணியை வீழ்த்தி தியோதர் கிண்ணத்தை சுவீகரித்தது தமிழ்நாடு அணி

In கிாிக்கட்
Published: 04:24 GMT, Mar 30, 2017 |
0 Comments
1304
icon_com
This post was written by : Anojkiyan
cham

இந்தியாவில் நடைபெற்ற உள்ளூர் ஒருநாள் தொடரான தியோதர் கிண்ணத்துக்கான இறுதிபோட்டியில், இந்தியா ரெட் அணியை 42 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தமிழ்நாடு அணி சம்பியன் பட்டம் வென்றுள்ளது.

நேற்று (புதன்கிழமை) விசாகப்பட்டினத்தில் இடம்பெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய தமிழ்நாடு அணி, 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 303 ஓட்டங்கள் குவித்தது. அணியின் அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 126 ஓட்டங்களும், ஜெகதீசன் 55 ஓட்டங்களும் பெற்றுக்கொள்ள பந்து வீச்சில், தவால் குல்கர்னி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதைதொடர்ந்து, 304 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா ரெட் அணி, 46.1 ஓவர்களில் 261 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் தமிழ்நாடு அணி 42 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மகுடம் சூடியது. இப்போட்டியின் ஆட்டநாயகனாக தினேஷ் கார்த்திக் தெரிவு செய்யப்பட்டார்.

சமீபத்தில் விஜய் ஹசாரே கிண்ணத்தை வென்ற தமிழ்நாடு அணி, தற்போது தியோதர் கிண்ணத்தையும் வெற்றிக்கொண்டு வீரநடை போடுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg