Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்திய அணியின் தலைவராக ரஹானே நீடிக்க வேண்டும்: ஜோன்சன் விருப்பம்

In கிாிக்கட்
Published: 06:31 GMT, Mar 30, 2017 |
0 Comments
1769
icon_com
This post was written by : Anojkiyan
mit

அவுஸ்ரேலிய அணிக்கெதிரான நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் தலைவராக செயற்பட்ட அஜின்கியா ரஹானே, அந்த பொறுப்பில் நீடிக்க வேண்டும் என அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜோன்சன் விருப்பம் தெரிவித்துள்ளார்.

அணித்தலைவர் விராட் கோஹ்லி தோள் பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக, அவுஸ்ரேலிய அணிக்கெதிரான இறுதி டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. ஆகையால் துணைத்தலைவரான அஜின்கியா ரஹானே அணியை சிறப்பான முறையில் வழிநடத்தி, அணியை வெற்றிக்கு முக்கிய பங்காகவும் அமைந்தார்.

இதனால் அனைவரினதும் பாராட்டை பெற்றுவரும் ரஹானே, மிட்செல் ஜோன்சனின் பார்வையிலும் தென்பட்டுள்ளார். இது குறித்து ஜோன்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

“அவுஸ்ரேலிய அணிக்கெதிரான இறுதி டெஸ்டில் இந்திய அணியின் அணித்தலைவராக இருந்த ரஹானே, அந்த பொறுப்பில் நீடிக்க வேண்டும். இது ஒரு கடினமான தொடராக அமைந்தது” என பதிவிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg