Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிறைச்சாலை பேருந்து மீதான தாக்குதல்: மேலும் இரு சந்தேகநபர்கள் கைது

In இலங்கை
Updated: 06:23 GMT, Mar 31, 2017 | Published: 06:23 GMT, Mar 31, 2017 |
0 Comments
1203
icon_com
This post was written by : Risha
prison bus attack

களுத்துறை சிறைச்சாலை பேருந்து மீது கடந்த மாதம் நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்படி தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வானை, மறைத்து வைத்து உதவிய இருவரே பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் மொரட்டுவை மற்றும் பண்டாரகம ஆகிய பிரதேசங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கைது இடம்பெற்ற பகுதியிலிருந்து இரு போலி இலக்கத் தகடுகளும், சில பாதணி ஜோடிகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தாக்குதலின் போது பயன்படுத்தப்பட்ட உடைகள் தீயிட்டு கொளுத்தப்பட்டதாக, சந்தேகநபர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

அத்துடன், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் திருடப்பட்ட வான், போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த தாக்குதலுக்கு வழங்கப்பட்டதாகவும், தாக்குதலின் பின்னர் போலி இலக்கத் தகடு அகற்றப்பட்டு, மீண்டும் உண்மையான இலக்கத்தகடை பொருத்தி மொரகஹஹேன பிரதேசத்தில் வானை விட்டுச் சென்றுள்ளதாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த முக்கிய புள்ளியாக கருதப்படும் சமயன் உள்ளிட்ட குழுவினரை நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்லும் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், சமயன் உள்ளிட்ட ஐந்து கைதிகளும் இரு சிறைச்சாலை உத்தியோகத்தர்களும் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg