Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாகிஸ்தானில் பள்ளிவாசல் முன்பாக கார்க்குண்டுத் தாக்குதல்: குறைந்தது 22 பேர் உயிரிழப்பு

In
Updated: 10:35 GMT, Mar 31, 2017 | Published: 10:34 GMT, Mar 31, 2017 |
0 Comments
1191
icon_com
This post was written by : Elakkiya
_95405281_pakistanafp

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் பள்ளிவாசல் ஒன்றின்  வெளிப்புறமாக இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற கார்க்குண்டுத் தாக்குதலில் குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 70ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆஃப்கான் எல்லைப் பகுதியில் ஷியா முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பரச்சினர் நகரில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றின் முன்பாகவே இந்த குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இன்று நோன்பு மாதத்தின் வெள்ளிக்கிழமை என்பதால் பள்ளிவாசலின் அருகில் பெருமளவானோர் கூடியிருந்த நிலையில், பள்ளிவாசலின் பெண்கள் நுழைவுவாசலுக்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் நிரம்பிய கார் ஒன்றின்மூலம் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் ராணுவ ஹெலிகொப்டர்கள், தனியார் வாகனங்கள் மற்றும் அம்புலன்ஸ் வண்டிகள் மூலம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் அவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகின்றது.

தாக்குதல் சம்பவத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg