Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீ­தொட்­ட­முல்ல அனர்த்தம்: உயிரிழப்பு 30 ஆக உயர்வு

In இலங்கை
Updated: 17:12 GMT, Apr 17, 2017 | Published: 17:12 GMT, Apr 17, 2017 |
0 Comments
1123
This post was written by : Vithushagan

கொலன்னாவ – மீ­தொட்­ட­முல்ல குப்பை மேடு சரிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  30 ஆக அதிகரித்துள்ளதாக இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த அனர்த்தம் காரணமாக இதுவரை 15 பெண்களும் 15 ஆண்களும் உயிரிழந்துள்ளதுடன், இவற்றில் 6 பேர் சிறுவர்கள் என இராணுவம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்த அனர்த்தத்தால் உயிரிழந்த எட்டுப் பேரின் இறுதிக்கிரியைகள் இன்று (திங்கட்கிழமை) கொலன்னாவ பொது மயானத்தில் இடம்பெற்றது.

கடந்த 14 ஆம் திகதி பிற்பகல் கொலன்னாவ – மீதொடமுல்ல குப்பை மேட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் சுமார் 150 இற்கு மேற்பட்ட வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் 180 குடும்பங்களைச் சேர்ந்த 625 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

மேலும் பலர் புதையுண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில் மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg