Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பஞ்சாப் அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் 5 ஓட்டங்களால் வெற்றி

In கிாிக்கட்
Updated: 04:11 GMT, Apr 18, 2017 | Published: 03:35 GMT, Apr 18, 2017 |
0 Comments
1334
icon_com
This post was written by : Risha
punja

ஐ.பி.எல். தொடரின் 19ஆவது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றுள்ளது.

பத்தாவது ஐ.பி.எல். தொடரின் 19ஆவது லீக் போட்டி ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.

நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி, முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

ஹைதராபாத் அணி சார்பில் அணித்தலைவர் டேவிட் வோர்னர் 70 ஓட்டங்களையும், நமன் ஓஜா 34 ஓட்டங்களையும் குவித்து அணிக்கு பலம் சேர்த்திருந்தனர்.

தொடர்ந்து 160 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, 19.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 154 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. அதன்படி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg