Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஹமில்டன் பகுதியில் கரைபுரண்டோடும் வெள்ளம்: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

In கனடா
Updated: 15:31 GMT, Apr 22, 2017 | Published: 11:19 GMT, Apr 22, 2017 |
0 Comments
1104
icon_com
This post was written by : Anojkiyan
vell

ஹமில்டன் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்துள்ளது.

பிராந்தியத்தின் பல பாகங்களிலும் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தினால், அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அணைக் கட்டுகள், நீரோட்டங்கள், பாலங்கள், போன்றவற்றிற்கு அருகில் வசிக்கும் மக்கள், தொடர்ச்சியாக அங்கு ஏற்படும் நிலைமையினை கண்காணித்து, அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை இந்த நிலையினை தொடர்ச்சியாக அவதானித்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஹமில்ட்டன் பொதுப் பணித்துறையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தாம் உதவிகளையும் வழங்கிவருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg