Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எரிபொருள் விநியோகத்தில் தடையில்லை: இந்தியன் ஒயில் நிறுவனம்

In இலங்கை
Updated: 07:47 GMT, Apr 24, 2017 | Published: 07:04 GMT, Apr 24, 2017 |
0 Comments
1170
This post was written by : Ravivarman

எரிபொருள் விநியோகச் செயற்பாடுகள் எவ்வித தடையும் இன்றி இடம்பெறுமென இந்தியன் ஒயில் நிறுவனத்தின் சிரேஷ்ட உப தலைவர் பீ.பீ.பவித்ரா தெரிவித்துள்ளார்.

பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்க ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ள நிலையில் அவர் இன்று (திங்கட்கிழமை) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாடு முழுவதிலும் காணப்படும் எமது நிறுவனத்துக்குச் சொந்தமான 202 எரிபொருள் நிரப்பு நிலையங்களின் ஊடாக, நாட்டின் எரிபொருள் தேவையில் 18 வீதத்தை நிவர்த்தி செய்ய முடியும். அதேவேளை இந்தியன் ஒயில் நிறுவனத்திடம் தற்போது 20 ஆயிரம் கிலோ லீற்றர் டீசலும், 11 ஆயிரம் கிலோ லீற்றர் பெற்றோலும் காணப்படுகின்றன.

இவற்றை கொண்டு 15 நாட்கள் நாட்டின் தேவையை பூர்த்தி செய்ய முடியும். தேவை ஏற்படும் பட்சத்தில் ஒரு வார காலத்திற்குள் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து எரிபொருளை பெற்றுத்தர முடியும்” என இந்தியன் ஒயில் நிறுவனத்தின் உப தலைவர்  மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg