Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஆஃப்கானிஸ்தான் விஜயம்

In
Updated: 10:59 GMT, Apr 24, 2017 | Published: 10:35 GMT, Apr 24, 2017 |
0 Comments
1156
icon_com
This post was written by : Elakkiya
miu

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜிம் மார்ட்டிஸ் இன்று (திங்கட்கிழமை) ஆஃப்கானிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். போரால் பாதிக்கப்பட்டுள்ள அந்நாட்டில் அமெரிக்க கொள்கைகளை நிர்வகிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக பாதுகாப்பு செயலாளரின் இந்த பயணம் அமைந்துள்ளது.

இந்த விஜயத்தின்போது ஜிம் மாரட்டிஸ் ஆஃப்கான் அதிகாரிகள் மற்றும் காபூலில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க துருப்புகளை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆஃப்கானில் கடந்த வெள்ளிக்கிழமை தலிபான் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 140 இராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில், ஆஃப்கான் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் இராணுவ தலைமை அதிகாரி ஆகியோர் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

இச் சந்தர்ப்பத்தில் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளரின் ஆஃப்கானிஸ்தான் விஜயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg