Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தினகரனை பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்குமாறு உத்தரவு (2ஆம் இணைப்பு)

In இந்தியா
Published: 04:00 GMT, Apr 26, 2017 |
0 Comments
1280
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam

இரட்டை இலை சின்னத்தை பெற்றுக்கொள்வதற்காக இலஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட டி.டி.வி.தினகரனை ஐந்து நாட்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்குமாறு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டி.டி.வி தினகரன் மற்றும் அவருடன் கைதான மல்லிகார்ஜுனா ஆகியோர் இன்று (புதன்கிழமை) பிற்பகல் டெல்லி நீதிமன்றத்தில் நீதிபதி பூணம் சௌத்திரி முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது, தினகரன் சார்பில் ஆஜராக வழக்கறிஞர் அவரை பிணையில் விடுதலை செய்யுமாறு கோரி மனு தாக்கல் செய்தார்.

எனினும் குறித்த வழக்கு தொடர்பாக சென்னை, கொச்சி, பெங்களூர் ஆகிய பகுதிகளுக்கு இருவர்கள் இருவரையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்த வேண்டும் எனவும், அவர்களை பொலிஸ் காவலில் ஒப்படைக்க வேண்டும் எனவும் அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்த நிலையில் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இரட்டை  இலைச்  சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுத்த  தினகரன் அதிரடி கைது

அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை பெற்றுக்கொள்வதற்காக தேர்தல் ஆணையகத்திற்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற குற்றச்சாட்டில் டி.டி.வி.தினகரன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இலஞ்சம் கொடுப்பதற்கு இடைத்தரகராக செயற்பட்ட சுகேஷ் சந்திரசேகரன் என்பவர் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், அவர் கொடுத்த வாக்குமூலத்தின் பிரகாரம் தினகரனிடம் கடந்த நான்கு நாட்களாக குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணை நடத்தி வந்தனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) சுமார் 7 மணித்தியாலங்கள் இடம்பெற்ற விசாரணையை அடுத்து தினகரன் கைதுசெய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவரது நண்பரான மல்லிகார்ஜூன் என்பவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர்களை இன்று பிற்பகல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தேர்தல் ஆணையகத்திற்கு 50 கோடி ரூபாய் இலஞ்சமாக கொடுப்பதற்கு முயன்றதோடு, இடைத்தரகராக செயற்பட்ட சுகேஷ் என்பவருக்கு 10 கோடி ரூபாவை தினகரன் வழங்கியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தை தொடர்ந்து கட்சிக்குள் ஏற்பட்ட பிளவானது, இறுதியில் கட்சியை இரண்டாக பிரித்தது.

ஜெயலலிதாவின் தொகுதியான ஆ.கே.நகர் தொகுதியின் தேர்தல் அறிவிக்கப்பட்டு, அதற்காக சின்னங்கள் வழங்கப்பட்ட போது அ.தி.மு.க.வின் இரு அணியினரும் கட்சியின் இரட்டை இலை சின்னத்தை பெற்றுக்கொள்ள தீவிரமாக முயன்றனர்.

இந்நிலையில், இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்த தேர்தல் ஆணையகம் அதனை பெறுவது தொடர்பாக இரு அணியினரிடமும் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கோரியிருந்தது.

இந்நிலையில், ஆர்.கே. நகர் தேர்தலுக்காக கட்சிகள் பணப் பரிமாற்றத்தில் ஈடுபடுவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து தேர்தலும் இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg