Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ணத்தை புறக்கணிக்கின்றதா இந்திய அணி?

In கிாிக்கட்
Updated: 11:57 GMT, Apr 26, 2017 | Published: 10:07 GMT, Apr 26, 2017 |
0 Comments
1750
This post was written by : Anojkiyan
icc

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ண தொடரை, இந்திய கிரிக்கெட் அணி புறக்கணிக்குமா என்ற கேள்வி இரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது

வருவாய் பகிர்வு தொடர்பாக ஐ.சி.சி. தலைவர் சஷாங்க மனோகரின் யோசனையை இந்திய கிரிக்கெட் சபை நிராகரித்ததாலேயே, இத்தொடரில் இந்திய அணி பங்கேற்பதற்கான முனைப்பை குறைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்தியாவைத் தவிர இத்தொடரில் பங்கேற்கும் ஏனைய 7 நாடுகளும் இப்போட்டிக்கான தமது அணிகளின் வீரர்களை அறிவித்துவிட்டன. அத்தோடு, இப்போட்டிக்கான அணி வீரர்களை அறிவிப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிந்துவிட்டது. இந்நிலையில், சம்பியன்ஸ் கிண்ண தொடருக்கான இந்திய அணி விபரம் வெளியிடப்படவில்லை.

இதனால், சம்பியன்ஸ் கிண்ண தொடரில் இந்திய அணி பங்கேற்குமா என்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ள ஐ.சி.சி.யின் கூட்டத்துக்கு பிறகு சம்பியன்ஸ் கிண்ண தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படுமென இந்திய கிரிக்கெட் சபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg