Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வறுமையினை குறைப்பதற்கு ஒன்ராறியோ மாநில அரசு புதிய திட்டம்

In கனடா
Updated: 12:21 GMT, Apr 26, 2017 | Published: 11:15 GMT, Apr 26, 2017 |
0 Comments
1182
This post was written by : Anojkiyan

வறுமையினை குறைப்பதற்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படும், ‘அடிப்படை வருமானத்தினை உறுதிப்படுத்தும்’ புதிய திட்டமொன்றை ஒன்ராறியோ மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்காக மேற்கொண்டுள்ள இப் பரீட்சார்த்த திட்டமானது, குறைந்த வருமானம் பெறுவோர் தமக்கான அடிப்படைத் தேவைகளுக்கு போதுமான வருமானத்தை பெற்றுக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

ஒன்ராறியோவின் ஹாமில்டன், லின்சே, தண்டர் பே ஆகிய மூன்று இடங்களிலும் ஒரு ஆண்டுக்கும் அதிக காலம் வசிக்கும் 18 வயதுக்கும் 64 வயதுக்கும் இடைப்பட்ட குறைந்த வருமானம் பெறும் 4,000 பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

அவ்வாறு தெரிவுசெய்யப்படும் பயனாளர்களில் தனி நபருக்கு ஆண்டுக்கு 16,989 டொலர்களும், தம்பதிகளாயின் 24,027 டொலர்களும், அவர்களது தொழிலில் இருந்து கிடைக்கும் தொகையில் 50 சதவீதம் நீங்கலாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு குறித்த உதவிகளை சுமார் 3 ஆண்டுகள் வழங்கி பரிசோதிக்கப்பட்டு, அது எதிர்பார்த்த பலனை அளிக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டால் அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஒன்ராறியோ அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இத் திட்டத்திற்காக ஒன்ராறியோ அரசுக்கு ஆண்டுக்கு சுமார் 50 மில்லியன் டொலர்கள் செலவாகும் என்று மதிப்பிட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg