Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முஸ்லிம்களுக்கு எதிரான பல சட்டங்களை சீனா இயற்றியுள்ளது:-

In
Updated: 14:22 GMT, Apr 27, 2017 | Published: 07:55 GMT, Apr 27, 2017 |
0 Comments
1213
This post was written by : Anojkiyan

சீனாவின் தன்னாட்சி மாநிலமாக விளங்கும் ஷிங்ஜியாங் மாநிலத்தில், முஸ்லிம்களுக்கு எதிரான பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

சட்ட சபை உறுப்பினர்களால் இயற்றப்பட்ட குறித்த சட்டங்களால் அப்பகுதியில் உள்ள முஸ்லிம் மக்கள் விசனமடைந்துள்ளனர்.

ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் முகத்தை மூடும் வகையில் பெண்கள் ஆடை அணிவதற்குத் தடை விதித்தும், அவ்வாறு ஆடையணிபவர்கள் குறித்து பொலிஸாருக்கு புகார் தெரிவிக்கலாம் என்றும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

அத்துடன், சமயத்தை பிரதிபலிக்கும் வகையில் தாடி வளர்க்கக் கூடாது என்றும், குழந்தைகளுக்கு முஸ்லிம் பெயர்களைச் சூட்டக்கூடாது என்றும் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

ஆரம்பத்தில் இது போன்ற சட்டங்கள் ஷிங்ஜியாங் மாநிலத்தின் சில பகுதிகளில் மட்டுமே வழக்கத்தில் இருந்தபோதும், தற்போது ஷிங்ஜியாங் மாநிலம் முழுவதும் இச்சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg