Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடகொரியா மீது சீனா தடை எச்சரிக்கை!: அமெரிக்கா அறிவிப்பு

In
Published: 06:16 GMT, Apr 28, 2017 |
0 Comments
1706
This post was written by : Risha

வடகொரியாவிற்கு எதிராக ஒருதலைபட்சமாக பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என வடகொரியாவிற்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

வடகொரியா மீதான எச்சரிக்கை தொடர்பில் ட்ரம்ப் நிர்வாகத்திடம் சீனா எடுத்துரைத்துள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் நேற்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளதாக ரொய்டர்ஸ் செய்திசேவை செய்தி வெளியிட்டுள்ளது.

வடகொரியா எவ்வித அணு ஆயுத சோதனைகளையும் நடத்தக் கூடாது எனவும், மீறி சோதனைகள் நடத்தப்படுமாக இருப்பின் ஒருதலைபட்சமாக பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என சீனா எச்சரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், சீனாவினால் எவ்வாறான தடைகள் விதிக்கப்படும் என்பது தொடர்பிலோ அல்லது சீனா எப்போது குறித்த எச்சரிக்கையை விடுத்தது என்பது குறித்தோ இராஜாங்க செயலாளர் எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை. இது தொடர்பில் சீனா இதுவரை எவ்வித உறுதிபடுத்தல் தகவல்களையும் வெளியிடவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

இந்நிலையில், வடகொரியாவின் செயற்பாடுகள் குறித்து ஐ.நா. பாதுகாப்பு சபையில் இன்று இடம்பெறவுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர்களுடனான சந்திப்பில் ரெக்ஸ் டில்லர்சன் கலந்துக் கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg