Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எந்த சூழ்நிலையிலும் நீச்சல் உடை அணியமாட்டேன்!

In சினிமா
Updated: 08:58 GMT, Apr 29, 2017 | Published: 08:58 GMT, Apr 29, 2017 |
0 Comments
1624
This post was written by : Rajinthan

ரசிகர்களை கவர எந்த சூழ்நிலையிலும் நீச்சல் உடை அணியமாட்டேன். உடைகள் நடிகைகளை பிரபலபடுத்தாது என நடிகை தமன்னா கூறியுள்ளார்.

ஹைதராபாத்தில் பேட்டி ஒன்றின் போது தமன்னா கூறுகையில். ‘‘நடிகைகள் ரசிகர்களை கவர்வதற்காக நீச்சல் உடை அணிந்து நடிப்பதாக சொல்கிறார்கள். உடம்பை காட்டி கவர்ச்சியாக வந்தால்தான் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்கிறார்கள். இதை நான் நம்ப மாட்டேன். குடும்ப பாங்காக வரும் நடிகைகளைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள். நான் சினிமாவில் அறிமுகமானபோதே பெற்றோரிடம் கவர்ச்சி உடைகளை அணிய மாட்டேன் என்று உறுதி அளித்துவிட்டேன்.

எனவே ரசிகர்களை கவர எந்த சூழ்நிலையிலும் நீச்சல் உடை அணியமாட்டேன். உடைகள் நடிகைகளை பிரபலபடுத்தாது. திறமைகள்தான் அவர்களை உயர்த்தும். இயக்குனர்கள் என்னிடம் கதை சொல்லும்போது கதாபாத்திரத்துக்கு எற்ற மாதிரி உடை அணிய வேண்டும் என்பதை தீர்மானித்து விடுவேன்.
நடிகர் கார்த்தியுடன் ‘பையா’ படத்தில் நடித்தபோது இரண்டு மூன்று ஆடைகளுக்கு மேல் நான் அணியவில்லை. அதை பலரும் பாராட்டினார்கள். அந்த படம் நன்றாக ஓடி வசூல் சாதனை நிகழ்த்தியது. நான் சினிமாவுக்கு வந்து 10 வருடங்களை தாண்டி விட்டது. இத்தனை வருடங்கள் கதாநாயகியாக நீடிப்பது சாதாரண வி‌டயமில்லை.

தற்போது தமிழில் மூன்று படங்களிலும் தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்துக்கொண்டு இருக்கிறேன். தொடர்ந்து நிறைய படவாய்ப்புகள் வருகின்றன. இப்போது எனக்கு நிறைய பக்குவம் ஏற்பட்டு இருக்கிறது. கதைகளை நானே தேர்வு செய்கிறேன். உடைகள் வி‌டயத்தில் மட்டும் கண்டிப்பாக இருக்கிறேன். இயக்குனர்கள் அரைகுறை உடையில் என்னை கவர்ச்சியாக காட்ட முயன்றதில்லை.

எல்லா தொழில்களிலும் பலன் கிடைக்காவிட்டால் அதை கசப்பான அனுபவமாக உணர்வார்கள். ஆனால் சினிமாவில் அப்படி இல்லை. இங்கு பலனை எதிர்பார்க்காமல் தொழிலை மட்டும் நேசிக்க வேண்டும். படங்கள் தோல்வி அடைந்தாலும் சிறப்பாக நடித்து இருந்தால் பாராட்டுக்கள் கிடைக்கும். எனது ஒவ்வொரு படமும் சிறந்த படங்களாக இருக்க வேண்டும் எனறே விரும்புகிறேன். இவ்வாறு தமன்னா கூறினார்.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg