Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பொன்சேகாவுக்கு அரசியல் செய்ய தெரியாது என்பதையே அன்று ஜனாதிபதி கூறினார்: டிலான் விளக்கம்

In இலங்கை
Published: 12:28 GMT, Apr 30, 2017 |
0 Comments
1107
icon_com
This post was written by : Anojkiyan

அரசியல் வேறு என்பதை சரத் பொன்சேகாவுக்கு தெளிவுபடுத்தவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவைக் கூட்டத்தில் நகைச்சுவையாக இராணுவத்துக்கு மீண்டும் செல்கிறீர்களா? என கேள்வி எழுப்பியதாக இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா விளக்கமளித்துள்ளார்.

பதுளை ஹாலிஎலவில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“இராணுவ அதிகாரிகளுக்கு அரசியல் செய்ய தெரியாது என்ற உண்மையை தெளிவுபடுத்தவே கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் சரத் பொன்சேகாவுக்கு சிறிய அறிவிப்பொன்றை வழங்கினார்.

அரசியல் என்பதும், இராணுவ நிர்வாகம் என்பதும் இருவேறானவைகள். இதனால்தான், இராணுவத்திலிருந்து வந்து தேர்தலில் போட்டியிட்டவர்களை மக்கள் புறக்கணித்தனர். ஜனாதிபதியும் இதனைத் தான் சரத்பொன்சேகாவுக்கு நகைச்சுவையாக அரசியலிருந்து விலகி மீண்டும் இராணுவத்துக்கு சேருமாறு சொன்னார்.

இராணுவத்திலிருக்கும் போது அவர்கள் திறமையானவர்கள். அது சரத்பொன்சேகாவுக்கும் பொருந்தும், கோட்டாபயவுக்கும் பொருந்தும், ஏனையவர்களுக்கும் பொருந்தும். இத்தகையவர்கள், அரசியலுக்கு வந்தவுடன், சும்மா அல்ல, நிரந்தரமாகவே சித்தியெய்யாதவர்கள்” என குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg