Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிஃபா நிகழ்ச்சித் திட்டங்களுடன் கியூபாவை இணைக்க முடியும்: இன்ஃபான்ரினோ

In உதைப்பந்தாட்டம்
Updated: 09:12 GMT, May 1, 2017 | Published: 08:30 GMT, May 1, 2017 |
0 Comments
1193
This post was written by : Elakkiya

சர்வதேச கால்பந்து சபையின் (FIFA) நிகழ்ச்சித் திட்டங்களுடனும் எதிர்வரும் 2026ஆம் ஆண்டு உலகக்கிண்ண கால்பந்து தொடருடனும் கியூபாவை இணைக்க முடியும் என சர்வதேச கால்பந்து சபையின் தலைவர் கியானி இன்ஃபான்ரினோ தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் சனிக்கிழமை கியூபாவிற்கு முதன்முறையாக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இன்ஃபான்ரினோ, தலைநகர் ஹவானாவில் கியூப விளையாட்டு அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடினார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே மேற்படி அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “கியூப மக்கள் விளையாட்டுக்களில் மிகவும் ஆர்வமாக உள்ளனர். குறிப்பாக கால்பந்து தொடர்பில் மிகவும் ஆர்வமாக உள்ளனர். அத்துடன் அவர்களுக்கு விளையாட்டு திறமைகளும் உள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, பிபாவின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட கால்பந்து அரங்கான லா போலர் அரங்கினையும் சென்று பார்வையிட்ட இன்ஃபான்ரினோ கால்பந்து போட்டி ஒன்றையும் ஆரம்பித்து வைத்தார். போட்டியின் நிறைவில், கியூப கால்பந்து வளர்ச்சியை பிபா ஆதரிப்பதுடன் கரீபியன் தீவு நாடுகளுக்கு பயிற்சியாளர்களை அனுப்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg