Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜெயலலிதாவின் சொத்துக்களை அரசுடமையாக்க வேண்டும்: திருநாவுக்கரசர்

In இந்தியா
Updated: 05:08 GMT, May 2, 2017 | Published: 04:55 GMT, May 2, 2017 |
0 Comments
1234
This post was written by : Shailu

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களை அரசுடமையாக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் தலைவர் சு.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை அருகேயுள்ள கிராமத்தில் மே தினத்தை முன்னிட்டு நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக சு.திருநாவுக்கரசர் பங்கேற்றார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா திரைத்துறையில் நடித்து சம்பாதித்த போயஸ் தோட்ட இல்லத்தை, தமிழக அரசு ஜெயலலிதா நினைவு இல்லமாக அறிவிக்க வேண்டும். அத்தோடு, அவரது புகைப்படங்கள், விருதுகள் மற்றும் பரிசுகள் என அனைத்தையும் போயஸ் இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்கான வைக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு ஜெயலலிதா அரசியலுக்கு காலடி எடுத்து வைத்த பின்னர் சம்பாதித்ததாகக் கூறப்படும் சிறுதாவூர் மாளிகை, கொடநாடு எஸ்டேட் பங்களா உள்ளிட்ட சொத்துக்களையும் அரசுடமையாக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மத்திய புலனாய்வுத் துறை அல்லது தமிழக பொலிஸ் துறையினர் நேர்மையான முறையில் விசாரணை நடத்தினால் பல உண்மைகள் வெளிவர வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg