Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மஹிந்த அணியின் மேதினக் கூட்டத்தில் இரண்டு மில்லியன் மக்கள்: விமல்

In இலங்கை
Published: 16:00 GMT, May 2, 2017 |
0 Comments
1220
This post was written by : Ravivarman
1.5

கூட்டு எதிர்க் கட்சியின் மே தினக் கூட்டத்துக்கு நாடு முழுவதிலுமிருந்து 02 மில்லியன் மக்கள் கலந்து கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இந்த தகவலைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டுடன் விளையாட யாருக்கும் அனுமதியில்லை என்ற செய்தியை காலிமுகத்திடலுக்கு வருகை தந்த மக்கள் வெள்ளம் அரசாங்கத்துக்கு பகிரங்கமாக சொல்லிவிட்டது. அத்துடன் எமது ஆட்சியில் மக்களுக்கு வழங்கிய சேவையின் பிரதிபலனே நேற்றைய மக்கள் வெள்ளம்.

இன்றைய ஆட்சியாளர்கள் விடுத்த சவாலில் நாம் வெற்றி பெற்றிருக்கின்றோம். எமக்குள்ள மக்கள் சக்தியைக் கண்டு இன்னும் இந்த அரசாங்கம் அதிர்ச்சியிலிருந்து  மீளவில்லை. எதிர்வரும் தேர்தல்களில் அவர்களுக்கான சிறந்த பதிலை நாம் வழங்குவோம்” என விமல் வீரவன்ச மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg