Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வரி வீதத்தை குறைப்பேன்: துருக்கி ஜனாதிபதி

In ஐரோப்பா
Updated: 10:49 GMT, May 3, 2017 | Published: 10:49 GMT, May 3, 2017 |
0 Comments
1407
This post was written by : Sylviya

பணவீக்கத்தை அதிகரிக்கச் செய்யும் முக்கிய காரணியான வரி வீதத்தை குறைப்பதாக துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகன் உறுதியளித்துள்ளார்.

துருக்கித் தலைநகர் அங்காராவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “துருக்கியின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிகள் அதிகரிக்கப்படும். இதுவரை காலமும் நாம் எம்மால் ஆன ஏற்றுமதி மற்றும் உற்பத்தியை மேற்கொண்டு வந்தோம். இனிமேலும் அதுபோன்றே மேற்கொள்வோம். அதே வேளை வரி வீதத்தையும் குறைப்போம்” என தெரிவித்தார்.

துருக்கியில் முன்பு நடைபெற்ற கூட்டம் ஒன்றின் போது தன்னை ‘வரி வீதத்தின் எதிரி’ என எர்டோகன் தெரிவித்திருந்தமை நினைவுகூரத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg