Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு வடக்கில் டெங்கு ஒழிப்பு ஒத்திவைப்பு!

In இலங்கை
Updated: 04:14 GMT, May 15, 2017 | Published: 02:05 GMT, May 15, 2017 |
0 Comments
1339
This post was written by : Ravivarman

தேசிய டெங்கு ஒழிப்புத்திட்டத்தின் திகதிகளை மாற்றும்படி மாகாண சுகாதாரப் பணிப்பாளருக்கு வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அறிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைக் குழப்பும் வகையிலேயே மத்திய அரசினால் இம்மாதம் 18ஆம் 19ஆம் திகதிகளில் டெங்கு ஒழிப்புத் திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது என குற்றஞ்சாட்டப்பட்டு வந்த நிலையில், குறித்த திகதிகளை மாற்றுமாறு மாகாண அமைச்சர்  கோரியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-

“மத்திய அரசினால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைக் குழப்பும் வகையில் கொண்டுவரப்பட்டிருந்த டெங்கு ஒழிப்புத் திட்டத்தின் திகதிகள் மாற்றப்பட்டுள்ளன. அதன்படி எதிர்வரும் 22ஆம், 23ஆம் திகதிகளில் மேற்படி திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

உயிரிழந்த எமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நாளில் இவ்வாறு தேசிய நிகழ்வுகளை நடத்துவது பல இடையூறுகளை ஏற்படுத்துமென்பதால் அத்திகதிகளை மாற்றுமாறு கோரியுள்ளேன்” என அமைச்சர் ப.சத்தியலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg