Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஹைதராபாத் அணிக்கு ஆதரவு தெரிவித்த இரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த வோர்னர்

In கிாிக்கட்
Updated: 11:43 GMT, May 18, 2017 | Published: 08:31 GMT, May 18, 2017 |
0 Comments
2923
This post was written by : Anojkiyan

நடப்பு ஐ.பி.எல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ஆதரவு தெரிவித்த அனைத்து இரசிகர்களுக்கும் அணியின் தலைவர் டேவிட் வோர்னர் நன்றி தெரிவித்துள்ளார்.

வெளியேற்று சுற்றுவரை முன்னேறிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, நேற்றைய (புதன்கிழமை) கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இப்போட்டியின் நிருபர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மேலும், “நாங்கள் 30 ஓட்டங்கள் குறைவாக எடுத்து விட்டோம். இந்த ஆடுகளத்தில் துடுப்பாட்டம் செய்வது எளிது அல்ல. இந்த ஆடுகளம் மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. அனைத்து ஐ.பி.எல். தொடரிலும் இந்த ஆடுகளம் உகந்ததாக இல்லை. மழையால் போட்டி பாதிக்கப்பட்டு 6 ஓவருக்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 6 ஓவரை வைத்து வெற்றி பெறுவது என்பது மிகப்பெரிய சவாலே. கொல்கத்தாவின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது” கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg