Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நுவரெலியாவில் பயணிகள் பேருந்து பள்ளத்தில் வீழ்ந்து விபத்து: 16 பேர் படுகாயம்

In இலங்கை
Updated: 11:33 GMT, May 18, 2017 | Published: 11:33 GMT, May 18, 2017 |
0 Comments
1332
This post was written by : Risha

நுவரெலியாவிலிருந்து பட்டிப்பொல நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்று 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் 16 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் வேளையில் மேற்படி விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மலையகத்தில் நிலவிவரும் சீரற்ற காலநிலையே இவ்விபத்திற்கான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், மேற்படி விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg