Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் நடிகர் கருணாஸ் திடீர் சந்திப்பு

In இந்தியா
Updated: 08:26 GMT, May 23, 2017 | Published: 06:18 GMT, May 23, 2017 |
0 Comments
1331
This post was written by : Shailu

அ.தி.மு.க.வின் கூட்டணி கட்சியான முக்குலத்தோர் புலிப்படையின் தலைவரான நடிகர் கருணாஸ், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்துள்ளார்.

குறித்த சந்திப்பானது இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள முதல்வரின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. இவர்களின் சந்திப்பு தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிப்படவில்லை.

நேற்று அ.தி.மு.க. அம்மா அணியைச் சேர்ந்த 8 சட்டமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த நிலையில், இன்று நடிகர் கருணாஸ் சந்தித்துள்ளார்.

திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினரான கருணாஸ், அ.தி.மு.க. அம்மா அணிக்கு ஆதரவு தெரிவித்து வருகிற நிலையில், இவர் கடந்த சனிக்கிழமை பெங்களூர் சென்று பரப்பன அக்ரகார சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவை சந்தித்தமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg