Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாகிஸ்தானுடனான போட்டி குறித்து எந்த அழுத்தமும் கிடையாது: கோஹ்லி

In கிாிக்கட்
Updated: 08:25 GMT, May 25, 2017 | Published: 04:48 GMT, May 25, 2017 |
0 Comments
1721
This post was written by : Anojkiyan

சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தானுடனான போட்டி குறித்து எங்களுக்கு எந்த அழுத்தமும் கிடையாது என இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்கு நேற்று (புதன்கிழமை) இந்திய அணி, இங்கிலாந்து நோக்கி புறப்படுவதற்கு முன்னதாக நிருபர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“வலுவான அணிகள் இருந்தால் மட்டுமே போட்டி அதிகமாக இருக்கும். டோனி மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் அணிக்கு வலுவான இரு துண்கள் போன்றவர்கள். பாகிஸ்தானுடனான போட்டி குறித்து எந்த அழுத்தமும் எங்களுக்கு கிடையாது. கிரிக்கெட் வீரர்கள் என்ற முறையில், மைதானத்திற்கு வெளியே நடக்கும் விடயங்களை கட்டுப்படுத்த எங்களால் முடியாது.

பாகிஸ்தானுடனான போட்டி முக்கியமான போட்டி என்பது எங்களுக்கு தெரியும். ஆனால், எங்களுக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை. எங்களைப் பொருத்தவரை பிற அணிகளுடனான போட்டியைப் போன்றே பாகிஸ்தானுடனான போட்டியையும் பார்க்கிறோம்” கூறினார்.

நடப்பு சம்பியனான இந்திய அணி முதல் போட்டியில் பாகிஸ்தானை 4ஆம் திகதியும், 2வது போட்டியில் இலங்கையை 8ஆம் திகதியும், கடைசி லீக் போட்டியில் தென்னாபிரிக்காயை 11ஆம் திகதியும் எதிர்கொள்கின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg