Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தீவிரவாத வலைப்பின்னல் அமைப்புடன் அபேடிக்கு தொடர்பு

In
Updated: 10:41 GMT, May 25, 2017 | Published: 10:41 GMT, May 25, 2017 |
0 Comments
1617
This post was written by : Sylviya

மஞ்செஸ்டரில் தாக்குதல் நடத்தியதாக கருதப்படும் சல்மான் அபேடி, தீவிரவாத வலைப்பின்னல் அமைப்புடன் தொடர்புடையவர் என தலைமை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளனர்.

குறித்த தாக்குதலைத் தொடர்ந்து பிரித்தானியாவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் மஞ்செஸ்டர் பொலிஸ் தலைமையகத்திற்கு வெளியே இருந்து கருத்து தெரிவித்த தலைமை பொலிஸ் அதிகாரி ஐயன் ஹொப்கின்ஸ் (Ian Hopkins), “மஞ்செஸ்டர் தாக்குதலை நடத்தியதாக கருதப்படுபவருக்கும் தீவிரவாத வலைப்பின்னல் அமைப்புக்கும் தொடர்புள்ளதாக தெரியவந்துள்ளது.  இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாம் தேடி வரும் ஒரு அமைப்பாகவே அது இருக்கும் என நான் நினைக்கின்றேன்” என தெரிவித்தார்.

கடந்த திங்கட்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் 22 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்ததோடு 64பேர் காயமடைந்தனர். குறித்த தாக்குதலின் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இதுவரை எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg