Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தினகரனின் பிணை மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

In இந்தியா
Updated: 10:49 GMT, May 26, 2017 | Published: 10:12 GMT, May 26, 2017 |
0 Comments
1383
This post was written by : Risha

அ.தி.மு.க.வின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தாக்கல் செய்த பிணை மனு மீதான விசாரணை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க-வின் இரட்டை இலை சின்ன விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள டி.டி.வி. தினகரன் பிணைக்கோரி தாக்கல் செய்திருந்த மனு இன்று (வெள்ளிக்கிழமை) டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இரட்டை இலை சின்னத்தை பெற்றுக்கொள்வதற்காக தேர்தல் ஆணையகத்திற்கு இலஞ்சம் கொடுக்க முயன்றதாக பெங்களூரைச் சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் கைது செய்யப்பட்டார்.

அவர் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் டி.டி.வி.தினகரன் டெல்லி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg