Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆஃப்கானில் கார்க்குண்டுத் தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு

In உலகம்
Updated: 09:15 GMT, May 27, 2017 | Published: 09:15 GMT, May 27, 2017 |
0 Comments
1463
This post was written by : Elakkiya

ஆஃப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற தற்கொலைக் கார்க்குண்டுத் தாக்குதலில் குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளதாக உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கோஸ்ட் மாகாணத்தில் அமெரிக்க படையினருக்கு பாதுகாப்பு வழங்கும் மாகாண பாதுகாப்பு படையினரின் வாகன தொடரணியை இலக்கு வைத்து இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாகவும் பொதுமக்களே பெருமளவில் உயிரிழந்துள்ளதாகவும் உள்துறை அமைச்சின் துணைத் தலைவர் நஜிப் டனிஸ் தெரிவித்துள்ளார்.

மாகாணத்தின் பிரதான பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் இடம்பெற்ற இந்த தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் உட்பட ஆறுபேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலுக்கு எந்தவொரு தீவிரவாத அமைப்பும் இதுவரை உரிமை கோரவில்லை. எனினும் ஆஃப்கானிஸ்தானிய படைகளுக்கு எதிராக தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல்களை அதிகரித்தள்ள நிலையில் மேற்படி கார்க்குண்டு தாக்குதலையும் தலிபான் தீவிரவாதிகளே மேற்கொண்டிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

புனித ரமழான் நோன்பு முதல்நாளில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg