Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமைச்சுக்களுக்கான புதிய வாகனக் கொள்வனவு இரத்து: ஜனாதிபதி அறிவிப்பு

In இலங்கை
Updated: 12:38 GMT, May 30, 2017 | Published: 07:21 GMT, May 30, 2017 |
0 Comments
2407
This post was written by : Surenth

அமைச்சுக்களுக்கு புதிய வாகனங்களை கொள்வனவு செய்தற்கு முன்னெடுக்கப்பட்ட தீர்மானத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைவிடுமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே குறித்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தம் காரணமாக பல்வேறு பாதிப்புக்களுக்கு முகங்கொடுத்துள்ள மக்களுக்கு உதவி வழங்குவது தொடர்பில் அமைச்சரவை கூட்டம் அவசரமாக கூட்டப்பட்டதாக சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கி அவர்களை மீள பழைய நிலைக்கு கொண்டுவர அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg