Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அசாத் மீதான குற்றச்சாட்டிற்கு போதிய ஆதாரமில்லை: ரஷ்ய ஜனாதிபதி

In ஐரோப்பா
Updated: 11:52 GMT, May 31, 2017 | Published: 11:52 GMT, May 31, 2017 |
0 Comments
1358
This post was written by : Risha
putin

சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாத்தின் படையினர் இரசாயன தாக்குதல் மேற்கொண்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நிராகரித்துள்ளார்.

மேலும், அசாத்தின் ஆதரவு படையினரால் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைப்பதற்கு போதிய ஆதாரம் இல்லை என்றும் ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவித்த அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிரியாவில் இரசாயன தாக்குதல்களை மேற்கொண்டமை தொடர்பில் பரிஸ் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என பிரான்ஸின் புதிய ஜனாதிபதி இமானுவெல் மக்ரோங்கின் கீழான உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, சிரிய ஜனாதிபதியை இழிவுபடுத்துவதற்கு அவருக்கு கூடுதல் அழுத்தம் கொடுக்கும் நோக்குடனேயே இவ்வாறான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது என்றும் ரஷ்ய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg