Chrome Badge
android.png
athavannews.png
Athavan Newsswitch to mobile siteswitch to desktop site
தலைப்பு செய்திகள்

வெளிவிவகார அமைச்சின் கீழ் லொத்தர் சபை: ட்ரான்ஸ்பரன்சி இன்டநெசனல் கவலை

In இலங்கை
Published: 08:05 GMT, Jun 19, 2017 |
0 Comments
1091
This post was written by : Ravivarman
1630380134transparency_international_sri-lanka

நிதி அமைச்சர் தவிர்த்து வேறு எந்த அமைச்சரின் வசமும் தேசிய லொத்தர் சபை வழங்கப்படுவது சட்டத்திற்கு முரணானது என இலங்கை ட்ரான்ஸ்பரன்சி இன்டநெசனலின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அசோக ஒபேசேகர கூறியுள்ளார்.

இன்றையதினம் (திங்கட்கிழமை) இலங்கை ட்ரான்ஸ்பரன்சி இன்டநெசனலினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தேசிய லொத்தர் சபையை சட்டத்திற்கு முரணாக வெளிவிவகார அமைச்சின் கீழ் கொண்டு வரும் வகையிலான வர்த்தமானியை வெளியிட்டமை குறித்து தாம் கவலையடைகின்றோம்.

1963ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட நிதி சட்டமூலத்திற்கு அமைய ஸ்தாபிக்கப்பட்ட தேசிய லொத்தர் சபை, 1997 மற்றும் 1998ம் ஆண்டுகளில் திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டது.

இதற்கமைய குறித்த சபை நிதி அமைச்சரின் கீழ் இதுவரை இயங்கி வந்தது. இந்த நிலையில், தற்போதைய நிதி அமைச்சரான மங்கள சமரவீரவின் மேற்பார்வையின் கீழ் இந்த சபை இயங்க வேண்டும்” என அசோக ஒபேசேகர மேலும் கூறியுள்ளார்.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.