Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பள்ளமடு – மகிலங்குளம் பிரதான வீதி திறந்து வைப்பு

In இலங்கை
Updated: 05:11 GMT, Jul 2, 2017 | Published: 04:31 GMT, Jul 2, 2017 |
0 Comments
1079
icon_com
This post was written by : Vithushagan
unnamed (1)

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் புதிதாக அமைக்கப்பட்ட பள்ளமடு – மகிலங்குளம் பிரதான வீதி  திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த வீதியை அமைச்சர் றிசாட் பதியுதீன் மற்றும் வடக்கு மாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் ஆகியோர் இணைந்து நேற்று (சனிக்கிழமை) வைபவ ரீதியாக திறந்து வைத்துள்ளனர்.

பள்ளமடு – மகிலங்குளம் பிரதான வீதி குன்றும் குழியுமாக காணப்பட்டமையினால் குறித்த வீதியை பயன்படுத்தி வந்த மக்கள் பெரிதும் சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர்.

சுமார் 455 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த வீதியின் அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் குறித்த வீதியின் அபிவிருத்தி பணிகள் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முழுமை பெற்றது. இதனைத் தொடர்ந்தே அந்த வீதி வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதில் வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சின் செயலாளர் சத்தியசீலன், அமைச்சரின் இணைப்பாளர்கள், கிராம மக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

unnamed (2)

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg