Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சட்டவிரோதமான முறையில் குப்பை கொட்டியவர்கள் கைது!

In இலங்கை
Updated: 14:07 GMT, Jul 7, 2017 | Published: 14:00 GMT, Jul 7, 2017 |
0 Comments
1291
This post was written by : Ravivarman

மேல்மாகாணத்தில் சட்டவிரோதமான முறையில் குப்பைகளை கொட்டிய நபர்கள் 98 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்புக்களின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட நபர்களுக்கு எதிராக குறித்த பொலிஸ் நிலையங்கள் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதிலும் அண்மைக்காலமாகப் பரவிவரும் டெங்கு நோயின் தாக்கத்தினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் இவ்வேளையில், தற்போது குப்பைகளை அகற்றுதல் பெரும் சவாலாக மாறிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg