Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழக ஆட்சியை ஒருபோதும் கலைக்க மாட்டோம்: வெங்கையா நாயுடு

In இந்தியா
Updated: 08:12 GMT, Jul 10, 2017 | Published: 05:08 GMT, Jul 10, 2017 |
0 Comments
1080
icon_com
This post was written by : Kemasiya
venkaiah naidu_0_1_0_0_2_2_0_0_0_1_0_0

குடியரசுத் தேர்தலின் பின்னர் தமிழக ஆட்சியை ஒருபோதும் கலைக்க மாட்டோம் என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஜி.எஸ்.டி. கருத்தரங்கில் கலந்து கொண்ட பின்னர், ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குடியரசு தேர்தலின் பின்னர் தமிழக ஆட்சியை கலைப்போம் என்று சிலர் விஷமப் பிரசாரம் செய்து வருவதாகவும், இதில் எவ்வித உண்மையும் இல்லையென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-

“தமிழகத்தில் இயங்கி வரம் அரசு மக்களால் தெரிவுசெய்யப்பட்டது . மக்களால் பெரும்பான்மை பெற்ற கட்சி தான் ஆட்சி அமைக்க வேண்டும். யார் முதல்வராக வேண்டும் என்பது குறித்து அந்தக் கட்சியின் சட்டப் பேரவை உறுப்பினர்களே முடிவு செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள ஆட்சியை மத்திய அரசு ஒருபோதுமே கலைக்காது.

அத்துடன் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மற்றும் முதல்வருக்கிடையிலான பிரச்சினையை அவர்களே பேசித் தீர்க்க வேண்டும். இதேவேளை, குடியரசுத் தேர்தலில் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெறுவார்” என்றார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg