Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முற்றுகை

In இலங்கை
Updated: 10:52 GMT, Jul 10, 2017 | Published: 09:39 GMT, Jul 10, 2017 |
0 Comments
1327
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
mullai protest (1)

நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்பிலவு பூர்வீக கிராம மக்களும், மீனவர்களும் தமது பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு கோரி, முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

இன்று (திங்கட்கிழமை) முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெறும் நிலையில் இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதனையடுத்து, மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் கைவிட்டது.

அத்தோடு, முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன் கடந்த 125 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் போனோரின் உறவினர்களையும், முதலமைச்சர் விக்னேஸ்வரன் சந்தித்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இச் சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா மற்றும் வடக்கு மாகாண சபை அமைச்சர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

 

mullai protest (3) mullai protest (4) mullai protest (5) mullai protest (2)

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg