Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அநாவசிய மன்னிப்புகள் எமக்கு தேவையில்லை: கோட்டாபய ராஜபக்ஷ

In இலங்கை
Published: 02:38 GMT, Jul 11, 2017 |
0 Comments
1334
icon_com
This post was written by : Elakkiya

எவருடைய அநாவசிய மன்னிப்பும் தமக்கு தேவையில்லை என்றும் நியாயமான தீர்வே அவசியமானது என்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாரிய ஊழல் மோசடி குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் நேற்று (திங்கட்கிழமை) ஆஜராகிய கோட்டாபய ராஜபக்ஷ சுமார் நான்கு மணிநேர விசாரணைகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது, ‘எமக்கு எதிராக தனிப்பட்ட அரசியல் பழிவாங்கல்கள் இடம்பெற்று வருகின்றது. நாம் செய்யாத குற்றங்களில் எம்மை சிக்கவைக்க முயற்சிக்கின்றனர். இந்த அரசாங்கத்தின் உண்மைமுகம் தற்போது வெளிப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், யுத்த குற்றச்சாட்டுக்களில் ராஷபக்ஷவினரை மன்னிக்க வேண்டும் என்று சிலர் அநாவசிய கருத்துக்களை முன்வைப்பதாக தெரிவித்துள்ள கோட்டாபய ராஷபக்ஷ, இவ்வாறான கருத்துக்கள் மூலம் தாம் குற்றவாளிகள் என்பதை அவர்கள் கூற விரும்புவதாகவும் எவ்வாறெனினும் இந்த விடயத்தில் தமக்கு யாருடைய மன்னிப்பும் அவசியமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமக்கு நியாயமான தீர்வே அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg