Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜி-20 மாநாட்டை எதிர்த்தவர்கள் அராஜகவாதிகள்: ஜேர்மன் அமைச்சர்

In ஐரோப்பா
Published: 07:16 GMT, Jul 11, 2017 |
0 Comments
1199
icon_com
This post was written by : Risha

ஜி-20 மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர்கள் அனைவரும் அராஜகவாதிகள் எனவும், அவர்கள் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு இணையானவர்கள் என்றும் ஜேர்மன் உள்துறை அமைச்சர் தோமஸ் டி மசியர் விமர்சித்துள்ளார்.

ஜி-20 மாநாடு ஜேர்மனியின் ஹம்பர்க் நகரில் கடந்த வாரம் நடைபெற்றது. இதன்போது, மாநாட்டில் கலந்துக் கொள்ள வருகைத் தந்த உலக நாடுகளின் தலைவர்களுக்கும், மாநாட்டிற்கும் எதிர்ப்பு தெரிவித்து இலட்சக்கணக்கான முதலாளித்துவ கொள்கை எதிர்ப்பாளர்கள் கறுப்பு உடையணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே வன்முறை வெடித்தது. அதன்பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த கலகத்தடுப்பு பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதல் நடத்தி போராட்டக்காரர்களை கலைத்திருந்தனர்.

இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகன், இந்திய பிரதமர் மோடி உட்பட பலநாட்டு தலைவர்கள் கலந்துகொண்டனர். ஜேர்மன் அதிபர் அஞ்சலோ மேர்க்கலினால் குறித்த மாநாடு ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg