Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிரன்பெல் குடியிருப்பு கட்டடத்தில் தொடரும் தேடுதல் பணிகள்

In
Updated: 11:25 GMT, Jul 12, 2017 | Published: 11:25 GMT, Jul 12, 2017 |
0 Comments
1190
icon_com
This post was written by : Risha
grenfel

மேற்கு லண்டனில் தீ விபத்திற்குள்ளான கிரன்பெல் குடியிருப்பு கட்டடத்தில் 250 அதிகாரிகளை கொண்ட பொலிஸ் குழு, இன்றும் (புதன்கிழமை) சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஜூன் மாதம் 14ஆம் திகதி இடம்பெற்ற அனர்த்தத்தில் 80 பேர் உயிரிழந்த நிலையில், 32 பேர் மாத்திரமே அடையாளம் காணப்பட்டனர். இந்நிலையில், உயிரிழந்த அனைவரையும் அடையாளம் காணும் நோக்கிலேயே இந்த தேடுதல் பணிகள் தொடர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், உயிரிழந்த அனைவரையும் அடையாளம் காண்பதற்கு சுமார் ஒரு மாதக்காலமேனும் எடுக்கும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கிரென்பெல் கட்டடத்தில் இருந்த குளிர்சாதனப் பெட்டியில் ஏற்பட்ட தீ முழுக் கட்டடத்திற்கும் பரவியது. பலரும் நித்திரையில் இருந்த இரவு வேளையில் இத்தீ விபத்து ஏற்பட்டிருந்தமையால் பலரும் வீடுகளுக்குள் சிக்கிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg