Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலகு ரக விமானம் விபத்து: விமானி உயிரிழப்பு

In உலகம்
Published: 06:05 GMT, Jul 15, 2017 |
0 Comments
1281
icon_com
This post was written by : Sylviya

கலிஃபோர்னியாவின் சான் காப்ரியல் வெலி விமானநிலையத்தில் இலகு ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த விமானி உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து நேற்று (வெள்ளிக்கிழமை) ஏற்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான விமானம் தொடர்பில் கருத்து தெரிவித்த பொலிஸார், மேற்படி விமானம் எல் மொன்ட்டே (El Monte) பகுதியில் இருந்து புறப்பட்டது எனவும் அது ஒற்றை எஞ்சினைக் கொண்டதெனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து ஏற்பட்டமைக்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், அது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விபரங்கள் விசாரணையின் பின்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg