Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

குடியரசு தலைவருக்கான தேர்தல் ஒரு யுத்தமாகும்- சோனியாகாந்தி தெரிவிப்பு

In இந்தியா
Updated: 09:20 GMT, Jul 17, 2017 | Published: 07:41 GMT, Jul 17, 2017 |
0 Comments
1125
icon_com
This post was written by : Kemasiya
06-1438804651-13-1423828037-sonia-gandhi4-600

குடியரசு தலைவர் பதவிக்கான தேர்தலானது வேறுபட்ட கொள்கைகளுக்கு இடையேயான யுத்தமாகும் என, நேற்று டெல்லியில் இடம்பெற்ற எதிர்க்கட்சி கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், குடியரசு தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கை நமக்கு இல்லாமல் இருக்கலாம், ஆனால் இந்த போராட்டத்தில் நாம் நிச்சயம் போராட வேண்டும்.

குறுகிய மனப்பாங்கு, நாட்டை பிளவுபடுத்துதல் மற்றும் மதவாத அரசியலை திணிக்க விரும்புவோரிடத்தில், நாம் இந்தியாவை பிணையாக ஒப்படைத்தவிடக் கூடாது. எனவே நாம் யார்? சுதந்திர போராட்ட காலத்தில் நாம் எதற்காக போராடினோம்? நமக்கு எத்தகைய எதிர்காலம் வேண்டும்? இவற்றை அறிந்து குறித்த மனப்பாங்குடையவர்களை நாம் எதிர்க்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்கட்சிகளின் சார்பில் போட்டியிடும் மீராகுமார், கோபால கிருஷ்ண காந்தி, ஆகியோருக்கு ஆதரவு அளிப்பதிலிருந்து அனைவரையும் உள்ளடக்கிய சகிப்புத் தன்மை கொண்ட இந்தியாவை முன்னெடுத்து செல்வது சாத்தியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் குடியரசு தலைவர் பதவி இன்று திங்கட்கிழமை இடம்பெறுகின்ற நிலையில், குடியரசு துணைத்தலைவர் தேர்தல் ஓகஸ்ட் 5ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg