Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பேரூந்து நடத்துநர் மீது கத்திக்குத்து தாக்குதல்

In இலங்கை
Updated: 08:57 GMT, Jul 20, 2017 | Published: 08:57 GMT, Jul 20, 2017 |
0 Comments
1134
This post was written by : Varshini

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேரூந்து நடத்துநர் மீது, அம்பாறை திராய்கேணி பகுதியில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த பேரூந்தில் பயணித்த பிரயாணி ஒருவரால், நேற்று (புதன்கிழமை) இரவு இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

படுகாயமடைந்த நடத்துநர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் தாக்குதல் நடத்தியவரை கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

களுவாஞ்சிக்குடி இலங்கை போக்குவரத்து சபை டிப்போவுக்கு சொந்தமான குறித்த பேரூந்து, நேற்று மாலை 6.30 மணிக்கு பொத்துவிலில் இருந்து மட்டக்களப்பிற்கு பிரயாணித்துக் கொண்டிருந்தபோது, அதில் அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் ஏறி மிதிபலகையில் பயணித்துள்ளார். அவரை பேரூந்தின் உள்ளே வருமாறு நடத்துநர் கூறியபோதும், குறித்த பெண் அதனை செவிமடுக்காமல் இருந்துள்ளார். இதனையடுத்து நடத்துநர் அப் பெண்ணை திட்டியுள்ளளார்.

இந்நிலையில், குறித்த பெண் வழங்கிய தகவலின் பிரகாரம் அவரது சகோதரியின் கணவரே நடத்துநரை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg