Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்தார் சிங்கப்பூர் துணை பிரதமர்

In இந்தியா
Published: 12:02 GMT, Jul 22, 2017 |
0 Comments
1212
icon_com
This post was written by : Risha

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சிங்கப்பூர் துணை பிரதமர் தர்மன் சண்முகரட்ணத்தை இன்று (சனிக்கிழமை) டெல்லியில் சந்தித்து கலந்துரையாடினார்.

மூன்று நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு சிங்கப்பூர் துணை பிரதமர் நேற்று டெல்லியை வந்தடைந்தார்.

பிரதமருடனான சந்திப்பிற்கு முன்னர் சிங்கப்பூர் துணை பிரதமர், இந்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து, இரு நாடுகளுக்கும் இடையிலான நிதி உறவை மேம்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடினார். அதனை தொடர்ந்து டெல்லியில் இடம்பெற்ற பொருளாதார கூட்டமொன்றிலும் பங்கேற்றார்.

இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிடையே வலுவான வணிக, கலாசார மற்றும் மக்கள் இணைப்புகள் வேரூன்றி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg