Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலையின் நினைவேந்தல் நிகழ்வு

In இலங்கை
Published: 14:01 GMT, Jul 25, 2017 |
0 Comments
1267
icon_com
This post was written by : Ravivarman
image-0-02-06-c1af27139a60a7c468b2fdff9d010f0cf51eef59b80f1e2f4ea69ccc0b7b441b-V

வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலையின் 34ஆம் ஆண்டு நினைவேந்தலும், தமிழ்த்தேசிய வீரர்கள் தினமும் ரெலோ அமைப்பினால் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ்.நல்லார் கந்தசுவாமி ஆலயத்தின் பின்னால் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் இன்றையதினம் (செவ்வாய்க்கிழமை) மேற்படி நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நினைவேந்தல் நிகழ்வில் வட.மாகாண மகளீர் விவகார அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், பா.கஜதீபன், அ.புவனேஸ்வரன் ஆகியோரும் பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

மேற்படி நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்ச்சியாக திருகோணமலை மாவட்டம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டளர்கள் தெரிவித்துள்ளனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg