Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜெருசலேம் புனித தலத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தளர்த்தப்பட்டன: பலஸ்தீனியர்கள் மகிழ்ச்சி

In உலகம்
Published: 06:55 GMT, Jul 27, 2017 |
0 Comments
1807
icon_com
This post was written by : Sylviya

இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் அமையப்பெற்றுள்ள டெம்பல் மௌன்ட் (Temple Mount) என அழைக்கப்படும் புனித தலத்தின் வாயிலில் போடப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான பலஸ்தீனியர்கள் அதனை கொண்டாடியுள்ளனர்.

குறித்த பாதுகாப்பு ஏற்பாடுகள் நேற்று (புதன்கிழமை) தளர்த்தப்பட்ட நிலையில், இன்று அதிகாலையிலேயே பலஸ்தீனிய மக்கள் அதனைக் கொண்டாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் அல் அக்சா பள்ளிவாசலில் உள்ள பிரதான வாயிற் கதவுகளில் உலோகத்திலான கண்டுபிடிப்புக் கருவிகள் பொருத்தப்பட்டதைத் தொடர்ந்து அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, குறித்த கண்டுபிடிப்புக் கருவிகளை அகற்றுவது தொடர்பான வாக்கெடுப்பு கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் பாதுகாப்பு அமைச்சரவையில் நடத்தப்பட்டு கண்டுபிடிப்புக் கருவிகளை அகற்றுவதென தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

முஸ்லிம்கள் மற்றும் யூதர்களின் முக்கிய தலமாக டெம்பல் மௌன்ட் புனித தலம் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg